தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மரணம்

பிரபல தொல்லியல் அறிஞரும் தமிழ் இலக்கிய ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன், சென்னையில் காலமானார்.
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மரணம்
Published on

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூரில் பிறந்த ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்ததோடு, சிந்துச் சமவெளி எழுத்து மற்றும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை ஆய்வு செய்து கூறியவர். வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை மூலமாக கல்வி பணிகளை செய்ததோடு, பழந்தமிழ் இலக்கியங்களையும் ஆய்வு செய்தவர். இவருக்கு, 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஐராவதம் மகாதேவன், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ பீம்ராவ், இந்து ஆசிரியர் ராம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com