புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி. நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர்களை நியமித்தும், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி. நியமனம்
Published on

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக பி.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக ஜி.சுகுணா சிங் மற்றும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக டி.ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக, டி.கண்ணன் மற்றும், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக ஏ.மயில்வாகனனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து மற்ற 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றமும் பதவி உயர்வும் கொடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com