5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
Published on

இது குறித்து உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்பின் லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்த சுனில் குமார் ஐ.பி.எஸ்க்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த சுனில் குமார் சிங்கிற்கு, சிறைத்துறை டி.ஜி.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரியாக இருந்த அபாஷ்குமாருக்கு, பொருளாதார குற்றப்பிரிவில் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.

சென்னை காவலர் நலவாரியத்தின் ஐ.ஜி யாக இருந்த சேஷசாயி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியானார். மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com