தூத்துக்குடியில் முதலீட்டாளர் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

x

தூத்துக்குடி செல்லும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

'வின் பாஸ்ட்' மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து, அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்திருந்தது.

முதற்கட்டமாக ஆயிரத்து 1119.67 கோடி ரூபாய் செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், வின்பாஸ்ட் நிறுவனத்தை திறந்து வைக்கவுள்ள தமிழக முதலமைச்சர், கார்களின் முதல் விற்பனையையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதை தொடர்ந்து, தூத்துக்குடியில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கொள்ளும் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் புதிய தொழில் தொடங்க 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.


Next Story

மேலும் செய்திகள்