

ஆற்காட்டை அடுத்த கானார் பஜனை வீதியில் பழமையான கிருஷ்ணர் கோயில் உள்ளது. கோயிலை இன்று காலை பூஜைக்காக திறக்கச் சென்றபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, உள்ளே இருந்த 84 ஆண்டுகள் பழமையான, 30 கிலோ எடையுள்ள கிருஷ்ணர் சிலை கொள்ளை போனது தெரியவந்தது. மூனேகால் அடி உயரமுள்ள ஐம்பொன் கிருஷ்ணர் சிலையின் மதிப்பு10 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. தகவலின் பேரில் வந்த வேலூர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.சுரேஷ், சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து ஆற்காடு நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.