"தங்கத்தில் முதலீடு... இரட்டிப்பு லாபம்" - நம்பி பணத்தை கொட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருவள்ளூரில், தங்கத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்கிற யுவஸ்ரீ மற்றும் அவரது மாமியார் ஷர்மிளாவிடம், தங்கத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக சரிதா என்பவர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதன்பேரில் 41 லட்ச ரூபாய் பணம் மற்றும் 80 சவரன் தங்க நகைகளை நான்சி என்கிற சுந்தரி, ஷீபா என்கிற குபேந்தரி மற்றும் சரிதா ஆகியோர் வாங்கிச் சென்றுள்ளனர். எனினும் பணம் மற்றும் அதற்கான லாபம் கிடைக்காததால் அதுகுறித்து புவனேஸ்வரி, திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, நான்சி என்கிற சுந்தரி மற்றும் சரிதாவை கைது செய்த போலீசார், ஷீபா மற்றும் சுந்தரியின் கணவர் பரிமள செல்வத்தை தேடி வருகின்றனர்.
Next Story
