பூர்விகா மொபைல்ஸில் "Vivo X200 FE" போன் அறிமுகம்

x

மொபைல் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு மைல்கல்லாக, பூர்விகா மொபைல்ஸ், விவோ இந்தியாவுடன் இணைந்து, சென்னையில், விவோ X200 FE போனை அறிமுகப்படுத்தியது. இதனை, சின்னத்திரை நடிகர்கள் புகழ் மற்றும் ஷபானா அறிமுகப்படுத்தினர். விழாவில் பூர்விகா மொபைல்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி யுவராஜ் நடராஜன், விவோ இந்தியாவின் தலைமை விற்பனை அதிகாரி அஸ்வானி பாஸ்கர் கட்னேனி, விவோ இந்தியாவின் பிராந்திய மற்றும் உள்ளூர் முக்கிய கணக்குகளின் தலைவர் மிர் மோஹிப் விவோ, இந்தியாவின் தயாரிப்பு பயிற்சியாளர் சாம் மேத்யூ, விவோ தமிழ்நாடு துணை பொது மேலாளர் கோபால கிருஷ்ணன், மற்றும் விவோ தமிழ்நாடு விற்பனைத் தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பூர்விகா, விவோ அதிகாரிகளும், சின்னத்திரை நடிகர்கள் புகழ் மற்றும் ஷபானாவும், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்க விவோ X200FE ஐ வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்