போத்தீஸில், புதிய தங்க நகை டிசைன்கள் அறிமுகம்...

x

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில், "ஸ்ரீனிவாச கல்யாண கலெக்ஷன்ஸ்" என்ற பெயரில் புதிய டிசைன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிரபல தங்க நகை நிறுவனமான போத்தீஸ், கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் சிறந்த தங்க நகை வடிவமைப்பிற்கான தேசிய விருது பெற்றுள்ளது.

இந்த நிலையில், அந்த நிறுவனம் பாரம்பரிய கலைநயத்துடன் "ஸ்ரீனிவாச கல்யாண கலெக்ஷன்ஸ்" நகைகளை உருவாக்கியுள்ளது . ஸ்ரீனிவாச–பத்மாவதி திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நகைகள், 80 கிராம் முதல் 500 கிராம் வரை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நகைகளை ராஜஸ்தானைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்