போதையில் பெண்களிடம் வம்பு.. பொறுமையிழந்து அடி வெளுத்த பயணிகள்

x

Cuddalore Bus Attack | போதையில் பெண்களிடம் வம்பு.. பொறுமையிழந்து அடி வெளுத்த பயணிகள்

மதுபோதையில் அரசு பேருந்தில் ரகளை - நடத்துனர் படுகாயம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மதுபோதையில் அரசுப் பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். போதையில், பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட நடத்துனரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் 4 இளைஞர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், 3 பேர் தப்பியோடினர். ஒருவரை மட்டும் போலீசில் ஒப்படைத்த மக்கள் தப்பியோடியவர்களை கைது செய்ய வேண்டுமென போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்தும் பாதித்தது.


Next Story

மேலும் செய்திகள்