பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரை வைத்து மிரட்டல்...கேடி வேலை செய்த லேடி இன்ஸ்பெக்டர்...

x

செங்கல்பட்டு

சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த பயங்கரம்...

மருத்துவர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிய போலீஸ்...

பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரை வைத்து மிரட்டல்...

கேடி வேலை செய்த லேடி இன்ஸ்பெக்டர்...

வேலியே பயிர மேஞ்சிடுச்சினு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது இங்க ஒரு லேடி இன்ஸ்பெக்டருக்கு கச்சிதமா பொருந்தியிருக்கு.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை…

பலத்த போலீஸ் பாதுக்காப்போடு காவல்துறை வாகனத்தில் சிகிச்சைகாக வந்த இவர் நாம் நினைப்பதுபோல் சாதாரன ஆள் இல்லை…. லஞ்ச வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர்.

சட்டத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயலில் ஈடுபட்டதுதான் இந்த லேடி இன்ஸ்பெக்டரையே இன்று குற்றவாளி கூண்டில் நிற்கவைத்திருக்கிறது.

கைதுச் செய்யப்பட்டவர் மகிதா அன்ன கிறிஸ்டி. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த இரண்டாம் தேதி காட்டாங்குளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் மகிதாவிடம் புகார் கொடுக்க வந்திருக்கிறார்.

அவர் அளித்த புகாரில் அந்த பெண்ணின் 17வயது மகளை திரிசூலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து கர்ப்பமாக்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மகிதா, கர்பமாக்கிய இளைஞரை கைது செய்து போக்சோ வழக்கில் சிறையிலடைத்திருக்கிறார்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட அந்த வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவலை சிறுமியின் தாய் மகிதாவிடம் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே கர்ப்பமடைந்த சிறுமிக்கு இரண்டுமுறை கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த சட்ட விரோத செயலுக்கு

சிங்கபெருமாள்கோவில், மற்றும் மறைமலை நகரிலுள்ள தனியார் மருத்துவமனை , டாக்டர்கள் உடைந்தையாக இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து லாபம் பார்க்க நினைத்திருக்கிறார் மகிதா.

உடனே இரண்டு மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்.

சிங்கபெருமாள் கோவிலை சேர்ந்த மருத்துவர் பராசக்தியும் மறைமலைநகரை சேர்ந்த மருத்துவர் உமாமகேஸ்வரியும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததை இன்ஸ்பெக்டர் மகிதாவிடம் ஒப்புக்கொண்டனர்.

இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவேண்டும் என்றால் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று மருத்துவர்களை மிரட்டியிருக்கிறார் மகிதா.

மருத்துவர் பராசக்தி தமிழ்நாடு தடவியல் இயக்குனராக பதவியில் இருந்துள்ளார். தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்துபோனவர் பத்து லட்சம் ரூபாய் பணத்தை மகிதாவிற்கு லஞ்சமாக கொடுத்திருக்கிறார்.

உமாமகேஸ்வரியை மிரட்டி இரண்டு லஞ்சம் ரூபாய் பணத்தை பெற்றிருக்கிறார் மகிதா.

ஆனால், இந்த விவகாரம் எப்படியோ வெளியில் கசிந்து தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புகாராக சென்றுள்ளது.

உடனே பணியிலிருந்து மகிதா சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

அதே வேளை மருத்துவர் பராசக்தியும் மறைமலைநகர் காவல் நிலையத்தில் மகிதா மீது புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுச் செய்த போலீசார் கைது செய்வதற்காக தலைமறைவாக இருந்த மகிதாவை வலைவீசி தேடி வந்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த அன்று பிள்ளைகளை பார்ப்பதற்காக பொன்னேரி பகுதிக்குச் வந்த மகிதாவை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்திருக்கிறார்கள்.

மகிதாவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அப்போது மகிதா மயக்கமடைந்து நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார். இதனால் போலீஸ் பாதுக்காப்பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலியே பயிரை மேய்ந்த கதை என்று சொல்வார்கள். அதற்கு காவல் ஆய்வாளர் மகிதாவே சிறந்த உதாரணம்.


Next Story

மேலும் செய்திகள்