கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
"முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை"
கோவை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பணிகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான முத்துசாமி, கோவை சித்திரைச்சாவடி, பேரூர், தொண்டாமுத்தூர், ஆலந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நொய்யல் ஆற்றங்கரையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
Next Story
