

சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு, சென்னை பாடியில் 300 க்கும் மேற்பட்ட ஆண்கள் வேட்டி அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்கள் பாதை இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நாகல்சாமி தலைமையில் ஆண்கள், சிறுவர்கள் வேட்டி அணிந்து கலந்து கொண்டு நெசவாளர்களின் நலன் காப்போம் என்கிற உறுதி மொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து தாரைத் தப்பட்டைகள் முழங்க "வேட்டி அணிவோம் நெசவாளர்களை காப்போம்" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று , பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை அளித்தனர்.