உலக மீனவர் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் ஆழ் கடலுக்கு சென்று, கடலில் பூக்கள் தூவி, பிரார்த்தனை செய்து, கேக் வெட்டி, ஆடிப் பாடி கொண்டாடினர். நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. மீனவர் தினத்தை ஒட்டி, கன்னியாகுமரியில் சுமார் 50 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. மாறாக, அவர்கள் ஆழ் கடலுக்கு சென்று கேக் வெட்டி உற்சாகமாக, மீனவர் தினத்தை கொண்டாடினர்.