Drug Prevention | தமிழகத்தில் சர்வ சாதாரணமாக சுற்றி திரிந்த இன்டர்நேஷனல் கிரிமினல்
தமிழகத்தில் சர்வ சாதாரணமாக சுற்றி திரிந்த இன்டர்நேஷனல் கிரிமினல்
மெத்தம்பெட்டமைன் கடத்தல் - நைஜீரிய நாட்டவர் கைது
ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் 150 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், போதைப் பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்த நைஜீரிய மருத்துவ மாணவர் மற்றும் ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மேலும் 150 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#methsmuggling #drug #prevention #bengaluru #thanthitv
