இன்டர்நேஷனல் கிரிமினல் கிருஷ்ணகிரியில் கைது

x

இன்டர்நேஷனல் லெவலில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நைஜிரியனை கிருஷ்ணகிரி போலீஸார் வாகன சோதனையின் போது அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். பிடிப்பட்டவரின் பெயர் எட்வர்ட் எஃபாம் இடுபோர். நைஜீரியா நாட்டை சேர்ந்த இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக மாநிலம் மேற்கு சி.இ.என் காவல் நிலைத்தில் எட்வர்ட் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை சோதனை செய்ய முயன்ற போது அதிலிருந்த நைஜிரியா நாட்டை சேர்ந்த நபர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். ஏதோ தவறாக உள்ளதென கண்டுபிடித்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர் பெங்களூர் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் எட்வர்ட் எஃபாம் என்பது தெரியவந்திருக்கிறது.

பிடிப்பவரிடமிருந்து ஒரு லேப்டாப், ஒரு கார், 5 செல்போன்கள், 3 லட்சத்து 93 ஆயிரம் இந்திய பணம், 100 யூரோ, பேங்க் பாஸ்புக், 9 செக் புக், ஏ.டி.எம் கார்டுகள், 4 பாஸ்போர்ட் ஆகியவற்றை போலீஸ் பறிமுதல் செய்துள்ளனர்.

எட்வர்ட் சிக்கிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த கர்நாடகா தனிப்படையினரிடம் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் குற்றவாளியை ஒப்படைத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக காவல்துறையினருக்கு சவால் விடுத்து வந்த குற்றவாளியை தமிழக போலீசார் மடக்கி பிடித்துள்ளதால் கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்