Instragram | Chennai | இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிகள் மோதல் - தந்தைக்கு நேர்ந்த கதி
சென்னை தேனாம்பேட்டையில் பள்ளி மாணவிகள் இருவர் இடையே இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட சண்டையால் பெற்றோர்கள் மோதிக்கொண்ட நிலையில், ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். ஹபிபுல்லா சாலையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறுமிகளின் பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு சிறுமியின் தந்தையான பால்சனை, மற்றொரு சிறுமியின் தந்தையான மணிகண்டன் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த பால்சன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மணிகண்டனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
