Tiruppur Instagram Reels Issue | இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் கோஷ்டி மோதல் - சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு
Tiruppur Instagram Reels Issue | இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் கோஷ்டி மோதல் - சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு.. பெற்றோர்களுக்கு அட்வைஸ் கொடுத்த போலீஸ் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, இரண்டு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களிடையே கோஷ்டி மோதலாக மாறியது. சேடபாளையம் மற்றும் அறிவொளி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் நண்பர்களை அழைத்து அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு சிறுவன் காயமடைந்த நிலையில், தகவலறிந்து வந்த பல்லடம் போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இரு தரப்பையும் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சிறுவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்..
