இணையத்தில் வேகமாக பரவும் பாடகர் ஸ்ரீனிவாஸ் போட்ட இன்ஸ்டா போஸ்ட்

பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாசின் இன்ஸ்டா பதிவு, தற்போது பேசு பொருளாகி உள்ளது. அவரது தனது பதிவில், யாராவது தன்னை கடவுளின் சிறந்த படைப்பு என நினைத்தால், அவர்களின் நோய்க்கு சிகிச்சை உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மனித நேயத்தை தவிர வேறு எதுவும் முக்கியமோ, சிறப்பு வாய்ந்ததோ கிடையாது என பதிவிட்டுள்ள அவர், இங்கு ஒருவரை மட்டுமே தான் குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். தங்களின் துறைகளில் வெற்றிகரமாக இருக்கும் பலருக்கும், இந்த நோய் உள்ளதாவும், அவர்களை சந்தித்து உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்றும், பாடகர் ஸ்ரீனிவாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com