

மதுரை காளவாசலை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நாமக்கல்லில் விடுதி ஒன்றில் தங்கி 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்ட மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த அல்ஹசன் என்பவர் நட்பாக பழகியுள்ளார். ஒருகட்டத்தில் ஆபாச வீடியோ சேட் செய்யும் அளவிற்கு இவர்களது நட்பு வளர்ந்துள்ளது. இந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து அந்த மாணவியை மிரட்டிய அல்ஹசன், நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடையவே, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து அல்ஹசனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.