

வேலூரைச் சேர்ந்த 18 வயது மாணவி, அங்குள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். அவருக்குத் திருமணம் செய்துவைக்கப் பெற்றோர் வரன் பார்த்து வந்த நிலையில், வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்ற அவர், மாலை வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததால், பெற்றோர், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசாரின் விசாரணையில், மாயமான மாணவி இன்ஸ்டாகிராம், டிக்டாக், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் மூழ்கிக் கிடந்தது தெரியவந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டதும்,
அது காதலாக மாறியதும் தெரியவந்தது. இந்த நிலையில், பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால், காதலனைத் தேடி அந்த மாணவி ஈரோட்டுக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை செல்போன் எண்ணை வைத்து மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்