இன்ஸ்டா நட்பு குலநாசம் - தனியாக இருந்த பெண் - வீடு புகுந்த இளைஞர்கள் ஆடிய ஆட்டம்
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 சவரன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர். காளிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மனைவி பவித்ராவுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த திருவள்ளூரை சேர்ந்த டில்லிராஜ், செங்கல்பட்டை சேர்ந்த ராஜகுமாரன் ஆகிய இருவரும், பவித்ரா வீட்டில் தனியாக இருந்தபோது வந்து, அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலிக் கொடியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பவித்ரா அளித்த புகாரின் பேரில், காரில் தப்பிச் சென்ற இருவரையும் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் மடக்கி பிடித்தனர்.
Next Story
