பள்ளி மாணவியிடம் நகையை திருடிய இன்ஸ்டா காதலனுக்கு வலைவீச்சு

x

நம்பி சென்ற 11ம் வகுப்பு மாணவி தங்க நகை, லேப்டாப் உடன் எஸ்கேப்

சேலத்தில் பள்ளி மாணவியை ஏமாற்றி தங்க நகை, மடிக்கணினியை திருடிச் சென்ற இன்ஸ்டா காதலனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி, ஈரோட்டை சேர்ந்த ராகுல் என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காதலனை நேரில் சந்திக்க ரயிலில் மாணவி சேலம் சென்றுள்ளார். அங்கு வந்த தனது இன்ஸ்டா காதலன் ராகுலை சந்தித்து பேசியுள்ளார். பின் மாணவியை ஏமாற்றி மாணவியின் தங்க நகை மற்றும் லேப்டாப் இருந்த பையுடன் ராகுல் தப்பியுள்ளான். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, தனது பெற்றோருடன் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்