மாதம்பட்டியின் வேறுமுகம் காட்டிய இன்ஸ்டா போஸ்ட் - பகீர் கிளப்பும் புகார்

x

முதல் மனைவியின் ஸ்ட்ராங்கான மெசேஜ்

மாதம்பட்டியின் வேறுமுகம் காட்டிய போஸ்ட்

பகீர் கிளப்பும் ரங்கராஜின் கல்யாண கலாட்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல் ஆணையர் அலுவலகத்துல பகீர் புகார் கொடுத்திருக்காங்க ஜாய் கிரிசில்டா... டூயட் பாடிய மாதம்பட்டி ஆராரோ பாட மறுப்பது ஏன்?

கோவிலில் தாலி கட்டி, ஹோட்டலில் ரூம்போட்டு, 7 மாதம் கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பகீர் புகார் அளித்திருக்கிறார் பேஷன் டிசைனர் ஜாய் கிரிசில்டா.

மிரட்டி கருக்கலைப்பு... மேலாளருடன் சேர்ந்து தாக்குதல்... அரசியல் செல்வாக்கை வைத்து மிரட்டுதல்...என அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை அந்த புகாரில் முன்வைத்திருக்கிறார்.

ஆம்..... கடந்த சில நாட்களாகவே இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு பெயர் மாதம்பட்டி ரங்கராஜ்.

திரைப்பட நடிகர்... சமையல் கலைஞர்.. கேட்டரிங் பிஸினஸ் மேன்... ஹோட்டல் உரிமையாளர்... தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவின் நடுவர்... என இவரோட விசிட்டிங் கார்டே ஸ்டார் ஹோட்டல் மெனு கார்டு ரேஞ்சுக்கு நீண்டுகிட்டே போகும்.

கடந்த 2019ல் வெளியான மெஹந்தி சர்கஸ் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் மதாம்பட்டி ரங்கராஜ்.

அதன்பிறகு சினிமா பிரபலம் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் என பல விஐபிகளின் வீட்டு விசேஷங்களுக்கு சிறப்பான கேட்டரிங் சர்வீஸ் செய்து பிரபல சமையல் கலைஞராக அங்கிகாரம் பெற்றார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவின் நடுவராவும் கலக்கி வருகிறார். இப்படி பல துறை மன்னனாக ஜொலிக்கும் மாதம்பட்டியின் தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் சர்ச்சை நிறைந்ததாகவே உள்ளது.

மாதம்பட்டி, கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஸ்ருதி ஒரு வழக்கறிஞர்.

இந்த சூழலில் தான் சமீப காலமாக கருத்து வேறுபாடு காரணமாக மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட ஸ்ருதி, இன்ஸ்டாகிராமில் கணவரோடும், குழந்தைகளோடும் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு My World ! My Tribe My Pride-என போஸ்ட் போட்டிருந்தார். மேலும் bio-விலும் madhampatty rangaraj'S wife என குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் தான் Wife of Madhampatty Rangaraj என ஒரு பேஷன் டிசைனரின் இன்ஸ்டா போஸ்ட் மாதம்பட்டியின் மறுபக்கத்தின் திரையை விளக்கியது.


Next Story

மேலும் செய்திகள்