இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது
கும்பகோணத்தில் ஆடிட்டரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்த சுமார் 30 தேக்கு மரங்களை சட்டவிரோதமாக வெட்டியுள்ளார். இதனையறிந்த தர்மபுரி காவல் ஆய்வாளர் நெப்போலியன் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்போவதாக கூறி லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் , வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்மபுரி தொப்பூர் சுங்கசாவடி அருகில் ரவிச்சந்திரனிடமிருந்து காவல் ஆய்வாளர் நெப்போலியன் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்தனர்.
Next Story
