"பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்யுங்கள்" - பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் பரவலாக தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
"பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்யுங்கள்" - பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
Published on

மழைக் காலத்தை ஒட்டி, பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து முழுமையாக ஆய்வு செய்யவும், ஆபத்தான கட்டடங்கள் இருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கட்டடங்களில் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆபத்தான கட்டடங்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதிக்கு மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com