சென்னை - செங்கல்பட்டு ஏ.சி. மின்சார ரயிலுக்கு வந்த சோதனை... தயங்கும் தெற்கு ரயில்வே
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் ஏசி மின்சார ரயிலில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், 50 சதவீத காலி இருக்கைகளுடன் ரயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. மின்சார ரயில் சேவை, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் 35 ரூபாயில் இருந்து 105 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதால், ஏ.சி. ரயிலில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இரண்டாவது ஏ.சி. ரயிலை அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
