காதலர்கள் காம பசிக்கு இரையான அப்பாவி - சிறுவனை தூக்கி கொடுத்து ஊரே கதறல்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும், ஜூலை 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அஞ்செட்டியை அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்த ரோகித் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே கிராமத்தை சேர்ந்த மாதேவன், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மற்றொரு மாதேவன், மற்றும் மாதேவனின் காதலி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மூவரையும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், ஜூலை 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே சிறுவனின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. சிறுவன் ரோகித்தை அந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மோடி என்று அழைப்பதாக கூறப்படுகிறது. உடலைக் கொண்டு வந்த போது அனைவரும் மோடி மோடி என்று கதறிஅழுது சோகத்தை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்