நீர்பிடிப்பு பகுதிகளில் குறைவான மழை - வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது...

வடகிழக்கு பருமழை போதிய அளவு இல்லாததால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.
நீர்பிடிப்பு பகுதிகளில் குறைவான மழை - வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது...
Published on
வடகிழக்குப்பருமழை போதிய அளவு இல்லாததால் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு வைகை ஆறு மட்டுமே குடிநீர் ஆதாரமாக விளங்குவதால், வரும் கோடையில் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com