Infant | Pregnancy | ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்.. அடுத்தடுத்து இறந்ததால் அதிர்ச்சி
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்.. அடுத்தடுத்து இறந்ததால் அதிர்ச்சி
ஒசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான பன்னார் கட்டா பகுதியில், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்று குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மஞ்சுளா என்பவருக்கு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கர்ப்பம் தரித்த நாளிலிருந்தே பரிசோதனை செய்து கொள்ளாமல் அலட்சியம் காட்டியது தான் இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
