

பண்ணல்லி புதூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனனின் மனைவி கஸ்தூரிக்கும் அர்ஜுனனின் தம்பி லட்சுமணனுக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கஸ்தூரிக்கும் லட்சுமணனுக்கு பிறந்த ஆண் குழந்தையை கொலை செய்து புதைத்த குற்றத்திற்காக தம்பதியர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், கொலைக் குற்றத்தை மறைக்க உதவிய காரணத்திற்காக அர்ஜுனனுக்கு கூடுதலாக ஏழு ஆண்டு தண்டனையும், தலா ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.