பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - தந்தை தற்கொலை முயற்சி
ராணிப்பேட்டை அருகே பிறந்து 8 நாளில் உயிரிழந்த மகளின் துயரத்தை தாங்காமல் தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
வாலாஜாபேட்டையில் மருத்துவர்களின் அலட்சியப்போக்கு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக கூறி தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார், தனது மனைவியை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்து, 8 மாதத்தில் எடை குறைவாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இரவு நன்றாக இருந்த குழந்தை காலை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு, மருத்துவர்களின் அலட்சியப்போக்கே காரணம் என கூறி தந்தை அஜித்குமார் மருத்துவமனை முன்பு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்காலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
