சென்னையில் நடக்கும் இந்தியா - இங்கிலாந்து டி20..ஆசையாக டிக்கெட் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியா - இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கு, போலி இணையதளம் மூலம் டிக்கெட் விற்று மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி வருகிற 25ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. போட்டியை நேரில் காண, புதுச்சேரியை சேர்ந்த இளைஞர், சமூக வலைதள லிங்க் மூலம் டிக்கெட் புக் செய்துள்ளார். 3 பேருக்கு டிக்கெட் எடுக்க, 6 ஆயிரத்து 360 ரூபாய் அவர் செலுத்தியுள்ளார். புக்கிங் செய்த பின் டிக்கெட் எதுவும் வராத நிலையில் அதிர்ச்சி அடைந்த இளைஞர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மோசடி கும்பல் போலி டிக்கெட் புக்கிங் இணையதளத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சைபர் கிரைம் போலீசார், அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கம் வழியாக டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
