இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Published on
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊழல் மிகப்பெரிய தடையாக உள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். புதிய தொழில் கொள்கை குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உலக வங்கி தயாரித்த பொருளாதார வளர்ச்சி பட்டியலில், 190 நாடுகளில் இந்தியா 100 இடங்களுக்குள் வந்துள்ளது இதுவே முதன்முறை என கூறினார். ஊழலை தடுக்க அனைத்து மக்களும், மகாத்மா காந்தியை போல எளிமையான வாழ்க்கை வாழ கற்றுகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com