நன்றி மறந்த துருக்கிக்கு இந்தியர்கள் வைத்த சூடு - இனி என்னாகும் துருக்கி மார்கெட்?

x

நன்றி மறந்து முதுகில் குத்திய

துருக்கிக்கு இந்தியர்கள் வைத்த சூடு

இனி என்னாகும் துருக்கியின் மார்கெட்..?

இந்தியா பாகிஸ்தான் பதற்றத்த தொடர்ந்து நடந்த ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை அப்ப பாகிஸ்தானுக்கு ஆதரவா நின்னது துருக்கி. அதுமட்டும் இல்லாம பாகிஸ்தான் ட்ரோன்கள பயன்படுத்தி நடத்துன தாக்குதல வெற்றிகரமா முறியடிச்சது இந்தியா. ஆனா பாகிஸ்தான் அனுப்பன ட்ரோன்கள் எல்லாம் துருக்கியோட அஸிஸ்கார்ட் சோங்கர் ட்ரோன்கள்னு தெரிய வந்தது பெரிய அதிர்ச்சிய தான் குடுத்தது. காரணம், 2023ல துருக்கிய பயங்கரமான நிலநடுக்கம் தாகுனப்ப ஆபரேஷன் தோஸ்த் மூலமா ஈட்பு நடவடிக்கைய துவங்கி முதல் நாடா களமிறங்குச்சு இந்தியா. ஆனா பாகிஸ்தானுக்கு துணையா துருக்கி இருக்கர காரணத்துனால அவங்களோட வர்த்தகத்த துண்டிச்சிக்கரோம்னு இந்திய வணிகர்கள் சொல்லிட்டு வராங்க. இந்த நிலையில இந்தியா துருக்கியுடனான வர்த்தகத்த ஒருவேள முழுமைக்கும் நிறுத்தி வெச்சா அதோட தாக்கம் எப்படி இருக்கும்னு விரிவா பார்க்கலாம்.

இந்தியா முழுமைக்கும் உள்ள பருத்தி வர்த்தகர்கள் துருக்கியுடனான வர்த்தகத்த நிறுத்திட்டதா இந்திய பருத்தி சங்கம் (CAI) தெரிவிச்சிருக்கு. இது தொடர்பா அந்த கூட்டமைப்போட தலைவர் உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியிருக்காரு. அதுல துருக்கிக்கு எதிரான வர்த்தக புறக்கணிப்ப முழு மனசோட ஆதரிக்கனும்னு தெரிவிச்சிருக்காரு. பாகிஸ்தானுக்கு அடுத்த படியா காஷ்மீர் விவகாரத்துல இந்தியாவுக்கு எதிரா ஐநா சபையில அதிகம் பேசுனது துருக்கி தான் நும் அவங்களோட செயல் இந்தியாவோட இறையாண்மைக்கு எதிரானதுன்னும் அந்த சுற்றறிக்கையில தெரிவிக்கபட்டிருக்கு.

அடுத்ததா பார்த்தோம்னா சுற்றுலா. 2023 ல 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் இந்தியால இருந்து துருக்கிக்கி சுற்றுலா போயிருக்காங்கன்னா 2024 ல 3 லட்சத்து 30 ஆயிரத்து 100 பேர் துருக்கி நாட்டுக்கு சுற்றுலாக்கு போயிருக்காங்க. இந்த நிலையில ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியா துருக்கியோட பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இந்திய மக்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா பயணத்த ரத்து செய்ய ஆரம்பிச்சிருக்கரதாவும் தகவல்கள் சொல்லப்படுது. குறிப்பா சமூக ஊடங்கங்கள்ள துருக்கிய புறக்கணிக்கனும்னு பகிரப்பட்ட ஹேஷ்டேகுகள், கருத்துக்கள் இது எல்லாமே பெரிய அளவுல தாக்கத்த ஏற்படுத்தியிருக்கரதா சொல்லப்படுது. அதுமட்டும் இல்லாம துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா போரதுக்கான முன்பதிவுகள் 60% குறைஞ்சதோட 250% திட்டமிட்ட பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாவும் பயண இணையதளங்கள் வாயிலா பார்க்க முடியுது.

அது மட்டும் இல்லாம பெரும்பாலான பயண தளங்கள் இன்னமும் முன்பதிவுகள் அனுமதிச்சாலும் சில தளங்கள் துருக்கிக்கான பயணத்த ஊக்குவிக்கரத தவிர்கரதையும் பார்க்க முடியுது. குறிப்பா இந்த நாடுகளுக்கான விளம்பரங்கள், சுற்றுலா டிக்கேட்டுக்கான தள்ளுபடி இதுவுமே மெல்ல அகற்றப்படரதையும் பார்க்கமுடியுது. ஆண்டுக்கு லட்ச கணக்குல வந்த சுற்றுலா பயணிகள் இப்படி புறக்கணிச்சா துருக்கிக்கு 3000 கோடி ரூபாய் அளவுக்கு சுற்றுலா வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கரதாவுமே சொல்லப்படுது.

இந்தியாவோட மார்பில் கற்கள் இறக்குமதியில ஆண்டுக்கு 70% பங்களிப்பு துருக்கியோடது தான். இதோட மதிப்பு மாடும் 2500 ல இருந்து 3000 கோடி ரூபாயா இருக்கு.

ஒருவேள இந்த வர்த்தகம் புறக்கனிக்கப்பட்டா, மார்பில் கற்கள் இறக்குமதிக்கு மாற்றா இருக்கர நாடுகள் இத்தாலி, ஈரான், எகிப்த் தான். இது சாத்தியமான்னு கேட்டா அதுக்கான பதில் என்னவோ ஆம் நு தான் இருக்கு.

அடுத்ததா பர்த்தோம்னா துருக்கி ஆப்பிள்கள். பருவகால சந்தைய உருவாக்கர இந்த ஆப்பீள்கள் துருக்கிக்கி 1000 த்துல இருந்து 1200 கோடி வருவாய ஈட்டி தருது. இதயும் புறக்கனிக்கர பட்சத்துல உள்நாட்டு உற்பத்தியோட சேர்த்து ஈரான், நியூசிலாந்து நாடுகள்ள இருந்து இறக்குமதி செய்யமுடியும். ஏற்கனவே அதுக்கான பணிகளும் நடந்துட்டு இருக்கரதாவும் சொல்லப்படுது.

அடுத்ததா விமானத்துறையிலயும் தாக்கங்கள் ஏற்படரத பார்க்க முடியுது. தேசிய பாதுகாப்பு பத்துன கவலை அதிகரிச்சதால துருக்கிய விமானத்துறை நிறுவனங்கள் இந்திய விமான நிலையங்கள்ள செயல்பட தடை விதிக்கப்பட்டுச்சு. இந்த நிறுவனங்கள் எல்லாமே முக்கிய இந்திய விமான நிலையங்கள்ள தரைவழி கையாளுதல இயக்குது. இப்ப அதுவும் மாத்தப்படுதுன்னா அதுக்கான தாக்கமும் துருக்கிக்கு இருக்கரத பார்க்கமுடியுது. அதுமட்டும் இல்லாம பாதுகாப்பு உட்கட்டமைப்ப பொறுத்த வரைக்கும் 2.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டுல கப்பல் கட்டும் ஒப்ப்ந்தம் இரு நாடுகளுக்கு இடையிலயும் இருக்கு. இந்த ஒப்பந்தத்துல இருந்தும் விலகர முடிவு எடுக்கப்பட்டா அதுவும் துருக்கிய ஒப்பந்ததாரகள படிப்படிய நீக்க வழிவகுகும்.

இந்தியாவோட மொத்த ஏற்றுமதில துருக்கிக்கான அளவுங்கரது 1.55, அதாவது 6.65 பில்லியன் டாலர் மதிப்புல ஏற்றுமதி செய்யுது இந்தியா. குறிப்பா பொறீயியல் பொருட்கள், ரசாயனங்கள், ஜவுளிகள் இதுல்லாம் அதிக அளவுல துருக்கிக்கி ஏற்றுமதி செய்யப்படுது. இந்த புறக்கணிப்புனால ஏற்றுமதி சந்தைய இந்தியா இழக்கரதுக்கான வாய்ப்பு ஏர்படலாம்னும் சொல்லப்படுது.

அதேபோல இந்தியாவின் இறக்குமதியில துருக்கியோட பங்கு வெறும் 0.5% தான். அதாவது 3.78 பில்லயன் டாலர். இதுனால பெரிய தாக்கத்த இந்தியா சந்திக்கும்னு சொல்லமுடியாதுன்னு சொல்லர பொருளாதார வல்லுநர்கள் இறக்குமதிக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யரது மூலமா தாக்கத்த தவிர்க்க முடியும்னும் சொல்ராங்க.

இந்தியால துருக்கிய அந்நிய நேரடி முதலீடுங்கரது தோராயமா 210-227 மில்லியன் டாலரா இருக்கு. அதே மாதிரி துருக்கியில இந்திய அந்நிய நேரடி முதலீடு 126-200 மில்லியன் டாலரா இருக்கு. இப்ப வர்த்தகம் பாதிக்கப்படும் பட்சத்துல குறிப்பிடத்தக்க தாக்க்த்த 2 நாடுகளுக்குமே குடுக்க வாய்ப்பிருப்பதான் பொருளாதார வல்லுநர்களோட பார்வையா இருக்கு.


Next Story

மேலும் செய்திகள்