

நோய்களை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மூலம் குணப்படுத்தும் முறையை கற்றுத் தரும் இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம், சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கவுள்ள இந்த நிறுவனத்தின் அறிமுக விழாவில், துணைவேந்தர் கீதா லட்சுமி, சர்வதேச தடகள வீரர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 12ஆம் வகுப்பில் உயிரியல் பாடம் படித்த மாணவர்களுக்கு இந்த துறையில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பும், நடனம், யோகா, களரி போன்றவையும் கற்றுத் தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.