Indian Revolution | ``இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்'' - காங்கிரஸில் இருந்தே வெளியான குரல்
இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் - ப. சிதம்பரம்
ப. சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர்
பசி, வறுமை வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி அடிகளாரின், மண்ணும் மனிதர்களும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், இந்தியாவில் பசுமை புரட்சிக்கு முன் அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்து தான் மக்களின் பசியை போக்கினார்கள். கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் பசி, வறுமை வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்காவிட்டால், இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என்று அவர் கூறினார்.
Next Story
