விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர் - யார் இந்த சுபான்ஷு சுக்லா?
ஆக்ஸியம் மிஸன் 4 மூலம் இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்லவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 29-ம் தேதி, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து ஸ்பெஸ் எக்ஸ்ஸின் டிராகன் விண்கலம் மூலம் 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு செல்லவுள்ளனர். இதில் இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா முதன்முறையாக விண்வெளிக்கு பயணிக்கவுள்ளார். 2019-ல் இஸ்ரோவால் விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.
Next Story
