வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Published on

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் வங்கதேசத்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. ப்ளோம்ஃபோன்டைன் (Bloemfontein) நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் 76 ரன்களும் கேப்டன் உதய் சரண் 64 ரன்களும் எடுத்தனர். பின்னர் பேட்டிங் செய்த வங்கதேசம் 167 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சவ்மி பான்டே 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com