அமெரிக்கா மீது அடுத்தடுத்து அம்புகளை ஏவிவிடும் இந்தியா

x

அமெரிக்காவை தாக்கி பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக, அமெரிக்காவை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்றும், மற்ற நாடுகளைப் போல் இந்தியா சிறந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்பத்தை பெற்றிருந்தால் பிற நாடுகளை துன்புறுத்தாது என்றும் கூறினார். ஏனென்றால் உலகில் நலனை முக்கியமானது என இந்திய கலாச்சாரம் கற்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான அமெரிக்கா வரி விதிப்பு குறித்து, அடுத்த‌டுத்து மத்திய அமைச்சர்கள் மறைமுகமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்