Cauvery Delta | கல்லணையில் நீர்திறப்பு அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் காவிரி டெல்டா
கல்லணையில் நீர்திறப்பு அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் காவிரி டெல்டா
கல்லணையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் நீர் திறப்பு தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து, கடந்த 6-ம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 ஆயிரத்து 418 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 7 ஆயிரத்து 617 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி, காவிரி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரத்து 54 கன அடியும், வெண்ணாற்றில் 3 ஆயிரத்து 50 கன அடியும், கல்லணை கால்வாயில் 760 கன அடியும், கொள்ளிடத்தில் 753 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
#cauverydelta #Kallanai #thanjavur #kaveriwater #thanthitv
