மின் கட்டண உயர்வு... தமிழ்நாடு முழுவதும் தொழில் அமைப்புகள் வேலை நிறுத்த போராட்டம்

x

பீக் ஹவர் (Peak hour) மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், சோலார் நெட்வொர்கிங் (Solar networking) கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, 165 தொழில் அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், 3 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரே நாளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்