திருக்குறளுக்கு பதில் தவறான வாசகம் "ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை.. நானே பொறுப்பு"

x

திருக்குறளுக்குப் பதில் வேறு வாசகம்- ஒருங்கிணைப்பாளர் பொறுப்பேற்பு

தமிழக ஆளுநர் வழங்கிய நினைவுப் பரிசில் திருக்குறளுக்குப் பதில் தவறான வாசகம் இடம்பெற்றிருந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவையை சேர்ந்த

டாக்டர் V.G மோகன் பிரசாத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில்,

மூத்த மருத்துவ நிபுணர்களுக்கு திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட பிழைக்கு தாமே பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிழைக்கு முழுப் பொறுப்பேற்று, ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்