2018 - 19 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்

தாமதம் ஆனால் அபராதம் விதிக்கப்படும் - வருமான வரித்துறை எச்சரிக்கை
2018 - 19 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்
Published on

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதம் செய்தால், அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018 - 19 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வருகிற 31 ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 5 லட்சத்திற்கு கீழ், ஆண்டு வருமானம் உள்ளவர்கள், வருகிற 31 ம் தேதிக்கு பிறகு கணக்கு தாக்கல் செய்தால், ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கால அவகாசம் தாண்டி, வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யா விட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com