ஒசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். அரசு ஒப்பந்ததாரான இவர், பாலகிருஷ்ண ரெட்டியின் நண்பர் என கூறப்படுகிறது.மதியழகன் வீட்டில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.