

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், 2 பேரும் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யலாம் என்றும், வழக்கின் அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் பிடி ஆணை பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதி, விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.