உறவுக்கார பெண்ணிடம் தகாத உறவு..கண்டித்த முதியவருக்கு நேர்ந்த கொடூரம் திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, அத்திக்கடையை சேர்ந்தவர் சிராஜுதீன். அதிமுக நிர்வாகியான இவர், அத்திக்கடை ஜமாத் செயலாளராகவும் இருந்து வந்தார். இவரது உறவுக்கார பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த முகமது அசாரூதின் என்பவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதில், முகமது அசாரூதினுக்கு ஏற்கனவே திருமணமனதால், அவரை சிராஜுதீன் கண்டித்து எச்சரித்திருக்கிறார். இதனால், ஆத்திரத்தில் இருந்த முகமது அசாரூதின் நள்ளிரவு கடை வீதியில் வந்து கொண்டிருந்த சிராஜுதீனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளுகும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிராஜுதீனின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், முகமது அசாரூதினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com