வேலூரில் பழிதீர்க்கும் வெறியில் ஒத்திகை பார்த்த சுள்ளான்களை தூக்கிய போலீஸ்
வேலூரில் நண்பனை சிறைக்கு அனுப்பியவரை பழி தீர்க்க நாட்டு வெடிகுண்டு தயாரிக்க இருந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியில் ரத்தீஷ் என்ற இளைஞர் மார்த்தாண்டம் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் அளித்த புகாரின் பேரில் லத்தேரி காவல்துறையினர் ரத்தீஷை கைது செய்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த ரத்தீஷின் நண்பர்களான நரேஷ் , விக்னேஷ் என்ற இருவரும் நாட்டு வெடிகுண்டு தயாரித்து மார்த்தாண்டத்தின் வீட்டில் வீச இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த லத்தேரி போலீசார் அவர்களை கைது செய்து வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மருந்துகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
