வீடுகளை சேதமாக்கிய `பறந்து வந்த பாறைகள்'.. திருப்பூரில் பெரும் அதிர்ச்சி..
திருப்பூர் மாநகராட்சியில் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கு குழி தோண்டுவதற்காக வெடிவைத்தபோது, குடியிருப்புகள் மீது பாறைகள் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாராபுரம் சாலை, கோவில் வழி, பாறைக்காலனி ஆகிய இடங்களில் குழாய்கள் பதிப்பதற்கு வெடி வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, பாறைகள் பெயர்ந்து விழுந்ததில் குடியிருப்புகள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட ஊழியரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story