மாலத்தீவில் அண்ணன்.. வீட்டில் அண்ணியுடன் உல்லாசத்தில் தம்பி - வந்து பார்த்ததும் நடந்த பரலோக விருந்து
வடகாடு கிராமத்தில் புள்ளாண்விடுதியை சேர்ந்த வீரப்பன் - வசந்தா தம்பதிக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.இதில் முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் முருகேசன் மாலத்தீவில் பணிபுரிந்து வருகிறார்.விமலா ராணி தனது மாமியார், மாமனாருடன் வசித்து வருகிறார். அதே வேளையில் மனைவியை பிரிந்து மகனுடன் பாஸ்கரன் அதே வீட்டில் மேல்புறத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரனுக்கும், அவரது அண்ணி விமலா ராணிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மனைவியிடம் கேட்ட போது பாஸ்கரன் தன்னை கட்டாயபடுத்தி தகாத உறவில் இருக்க வைத்ததாக கூறியதால், ஆத்திரமடைந்த அண்ணன் முருகேசன், வெளிநாட்டிலிருந்து வந்து, இரவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த தனது தம்பியை கொலை செய்துள்ளார்..
பின்னர் தனது பெற்றோர் உதவியுடன் பாஸ்கரன் உடலை தூக்கிச் சென்று வீட்டின் அருகே உள்ள சாலையில் விபத்தில் இறந்தது போல் ஏற்பாடு செய்து விட்டு, மீண்டும் வெளியூருக்குச் சென்று விட்டு, தம்பியின் மரணத்திற்கு வருவது போல் நாடகமாடியுள்ளார் முருகசன்..
விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் பாஸ்கரனின் தந்தை , தாய் , அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
