போஸ்ட்மேன் தற்கொலை-ஆன் லைன் ரம்மி காரணமா? என விசாரணை

x

சென்னையில் போஸ்ட்மேன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆன்லைன் ரம்மி காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலூரை சேர்ந்த நெடுமால் என்பவர் ஜாபர்கான் பேட்டையில் நண்பர்களுடன் தங்கி போஸ்ட்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நெடுமாலின் மகன் அண்மையில் மரணமடைந்த நிலையில் சோகத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் உள்ள நெடுமால் பல பேரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. எனவே நெடுமாலின் செல்போனை கைபற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்